பெண்கள் இலவச பேருந்து பயணம்: அரசு முக்கிய உத்தரவு!
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வரும் திட்டங்கள் பொது மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் நடத்துனர்கள், ஓட்டுநர்கள் கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் - ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தை குறித்த இடத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்ததிற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.
No comments:
Post a Comment