முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எம்.பி., சு.வெங்கடேசன் திடீர் கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எம்.பி., சு.வெங்கடேசன் திடீர் கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எம்.பி., சு.வெங்கடேசன் திடீர் கடிதம்!

கீழடி மற்றும் சிவகலை பகுதியில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாளந்தா, சாரநாத் லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய ஆய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்கள் ஆக ஒன்றிய அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ளது.

அதே போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியை சங்ககால வாழ்விட பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும். அகழாய்வுகள் காலத்தின் கண்ணாடி போன்றது. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்றுத் துறைக்கு செய்யும் நேர்மையான பங்களிப்பாகும்.
அந்த வகையில் கீழடி மற்றும் சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad