சசிகலா, ஓபிஎஸ் கூட்டு: டிடிவி தினகரனுடன் கை கோர்க்கிறார் எடப்பாடி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

சசிகலா, ஓபிஎஸ் கூட்டு: டிடிவி தினகரனுடன் கை கோர்க்கிறார் எடப்பாடி?

சசிகலா, ஓபிஎஸ் கூட்டு: டிடிவி தினகரனுடன் கை கோர்க்கிறார் எடப்பாடி?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் சசிகலாவை பற்றியதாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சசிகலாவின் தூதுவராக இந்த பயணத்தின் போது ஓபிஎஸ் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரு சிறையில் இருந்து சென்னை திரும்பியதும் அதிமுக நிர்வாகிகள், முக்கிய அமைச்சர்கள் சசிகலா பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக சென்னை வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என தொண்டர்களிடம் சொன்னார். ஆனால், அடுத்த சில வாரங்களில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் இந்த முடிவை எடுத்ததற்கு பாஜகதான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. தேர்தலுக்கு முன்பே சசிகலாவை அதிமுகவில் இணைத்து வைக்கவே பாஜக மேலிடம் விரும்பியதாக கூறப்பட்டது. ஆனால், சசிகலா இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்றும் பாஜக தலைமையை

எடப்பாடி பழனிசாமி நம்ப வைத்தார். அதேபோல், சசிகலா பின்னால் அணிவகுக்க இருந்த எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளையும் டெல்லியை காட்டி தடுத்து விட்டார்.

ஆனால், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. இதனால், எடப்பாடியால் பழையபடி அதிமுகவை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. சசிகலாவுக்கு எதிராகவும் அவரால் அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் போட வைக்கமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை சசிகலா சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஆடியோக்களை வெளியிட்டு வரும் அவர், தற்போது தொலைக்காட்சிகளிலும் பேசத் தொடங்கியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், சசிகலா பற்றி யாரும் வாய் திறக்கவில்லையாம்.


அதேநேரத்தில் தினகரனையும், டாக்டர் வெங்கடேஷையும் சசிகலா ஒதுக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜக தன்னை எதிர்க்கவில்லை என்கிற இமேஜையும் அவர் பரப்பி வருகிறார். ஆனால், சசிகலா அரசியலுக்கு வந்தால் வழக்குகள் பாயும் என்று டிடிவி தரப்பு கூறிவருகிறது. அதேசமயம், தனது மகனுக்கு அமைச்சர் பதவி பறிபோகக் காரணம் எடப்பாடிதான் என்று திடமாக நம்பும் ஓபிஎஸ், சசிகலா என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு சென்று விட்டதாக கூறுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஓபிஎஸ், சசிகலாவை வெளிப்படையாக ஆதரிப்பார் என்று சசிகலா வட்டாரங்கள் கூறுகின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக உள்ள வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்றோர் மீது திமுக ஊழல் வழக்குகளை பாய்ச்சும். அப்போது எடப்பாடி முகாம் கலகலத்துப் போகும் என சசிகலா திட்டம் போட்டு காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.



அதே நேரத்தில் எடப்பாடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள டிடிவி தினகரனுடன் கைகோர்ப்பார். அதற்கான ஆலோசனைகள் தொடங்கி விட்டன என்கிறது சில தகவல்கள். தற்போது செந்தமிழன், சி.ஆர். சரஸ்வதி மூலம் பத்திரிகையாளர்களை சந்திக்க வைத்து அமமுக ஆக்டிவாக இருப்பதாக காண்பித்து வரும் டிடிவி தினகரன், அவரது வீட்டுத் திருமணம் முடிந்ததும் ஆக்டிவாக அரசியலுக்கு வந்து விடுவார் என்கிறனர் அமமுகவினர்.

No comments:

Post a Comment

Post Top Ad