முன்னாள் சபாநாயகரை தூக்கும் திமுக? இதுக்கு பின்னால் இப்படி ஒரு கணக்கா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

முன்னாள் சபாநாயகரை தூக்கும் திமுக? இதுக்கு பின்னால் இப்படி ஒரு கணக்கா?

முன்னாள் சபாநாயகரை தூக்கும் திமுக? இதுக்கு பின்னால் இப்படி ஒரு கணக்கா?



கொங்கு மண்டலத்தில் தனது கொடியை நாட்டவேண்டும் என திமுக பலமாக முயற்சித்து வருகிறது. கடந்த சில தேர்தல்களில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தது கொங்கு. இதை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதன் நீட்சியாகத் தான் தற்போது கொங்கு நாடு விவாதம்கூட நடைபெறுகிறது.

இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் வெகு சீக்கிரம் கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை காட்டவேண்டும் என திமுக முயற்சித்து வருகிறது. அதாவது உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தி அந்தப் பகுதியில் வெற்றியைப் பெற வேண்டும். கோவை உள்ளிட்ட மாநகராட்சிகள் தங்கள் வசம் வர வேண்டும் என திமுக திட்டமிடுகிறது.


அந்த வகையில் பிற கட்சிகளில் உள்ள கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் கட்டம் கட்டி தூக்கிவரப்படுகின்றனர். அமமுக பழனியப்பன், அதிமுக தோப்பு வெங்கடாசலம், மநீம மகேந்திரன் ஆகியோர் சமீபத்திய உதாரணங்கள். இந்தப் பட்டியலில் முன்னாள் சபாநாயகர்தனபால் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad