கதம், கதம்: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

கதம், கதம்: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!

கதம், கதம்: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!



கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எனினும், கட்சி தொடங்கப்படாமல் இருந்தது.

இதனிடையே, ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி என்றும், அதற்கான தேதியை டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த ரஜினிகாந்த், தன்னுடைய உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்து அறிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் கட்சி களம் காணும் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் கடந்த 9ஆம் தேதி சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக, தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மக்கள் மன்றத்தின் பணி என்ன என்பது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்ற கேள்விகள் உள்ளன. நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுத்துவிட்டு அது குறித்து தெரிவிக்கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad