சேலம் விபத்து வைரல் வீடியோ: ஒருவர் மருத்துவமனையில் மரணம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

சேலம் விபத்து வைரல் வீடியோ: ஒருவர் மருத்துவமனையில் மரணம்..!

சேலம் விபத்து வைரல் வீடியோ: ஒருவர் மருத்துவமனையில் மரணம்..!

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கவுண்டம்பாளையம் அருகே கடந்த வாரம் அசுர வேகத்தில் வந்த கார் எதிரே சென்ற பைக்கை மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அப்போது சாலை தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளான பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண்குமார், அஜித்குமார் ஆகியோரை வழியில் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி காண்போரை பதைபதைக்க வைத்தது. இந்நிலையில் நெடுஞ்சாலை போலீசார் அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து குற்றவாளிகளை தேடியதில் பெரம்பலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் வினோத், கௌதம் ராஜ் மற்றும் அருண்குமார் ஆகிய 4 பேர் பிடிபட்டனர்.

விசாரணையில், இவர்கள் நான்கு பேரும் குடி பழக்கத்தை மறப்பதற்காக சங்ககிரி அருகேயுள்ள கோவிலுக்கு சென்று அங்கு பூஜைகளை முடித்துவிட்டு மீண்டும் குடித்துவிட்டு காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

இந்நிலையில் அவர்கள் மீது தலா மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அஜித்குமார் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே விபத்து நடந்து வெளியான வீடியோவில் அஜித்குமார் உயிருக்கு போராடும் காட்சி இடம்பெற்று மனதை உலுக்கியது.

No comments:

Post a Comment

Post Top Ad