எங்களுக்கு எதிரி இவங்க தான்; சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

எங்களுக்கு எதிரி இவங்க தான்; சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை!

எங்களுக்கு எதிரி இவங்க தான்; சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டதால், அந்த இடத்திற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் பாஜகவில் சேர்ந்த ஓராண்டிற்குள் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் கட்சி சீனியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் கோவையில் இருந்து சென்னைக்கு காரில் சென்ற அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் முடக்கம்

பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆசியுடன் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கக் கூட நேரம் கொடுக்காமல் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளனர்.

விசாரணை தேவையற்றது

இந்தியர்கள் பலரும் ‘பெகாசஸ்’ செயலி மூலம் உளவு பார்க்கப்படவில்லை. வேண்டும் என்றே நாடாளுமன்றம் கூடுவதற்கு முதல் நாள் இப்படியொரு குற்றச்சாட்டு பரப்பப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நீதி விசாரணை, நாடாளுமன்ற குழு விசாரணை எல்லாம் தேவையற்றது. அரசியல் நோக்கத்திற்காக,

திமுகவிற்கு மாற்று பாஜக தான்

நடப்பு கூட்டத்தொடரில் நல்ல விஷயங்கள் நடக்கக்கூடாது என்ற காரணத்திற்காக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போகிறோம் என்று கிளம்பி போகிறார்கள். இது என்ன மாதிரி அரசியல் என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால் எதிரி கட்சியாக ஏன் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு மாற்று பாஜக தான்.

ஏனெனில் பேச்சு அரசியலில் நாங்கள் தான் அவர்களுக்கு எதிரி. எங்களுக்கு அவர்கள் தான் எதிரி. எங்கள் இரண்டு பேருக்கும் தான் யுத்தம் நடக்கிறது. இது இருமுனைப் போட்டியாக போய்க் கொண்டிருக்கிறது. அதேசமயம்

அதிமுக - பாஜக கூட்டணி சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad