சேனாபதி Vs மகேந்திரன்: திமுக கோவை மேயர் வேட்பாளர் யார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

சேனாபதி Vs மகேந்திரன்: திமுக கோவை மேயர் வேட்பாளர் யார்?

சேனாபதி Vs மகேந்திரன்: திமுக கோவை மேயர் வேட்பாளர் யார்?


சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துவிட்டது. இரு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் அடுத்த தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகிவருகிறது.
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஆண்டு இறுதிக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் இந்த தேர்தலை மனதில் கொண்டே கட்சிகள் பணியாற்றி வருகின்றன.

கொங்கு மண்டலத்தில் பெரும் சரிவைச் சந்தித்து வரும் திமுக மாற்று கட்சிகளில் செல்வாக்கான நபர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் கட்சியை பலப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் கோவை மாநகராட்சி மேயராக யார் போட்டியிடுவார் என்ற கேள்வி கொங்கு மண்டல திமுகவில் வலம் வருகிறது.

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான

கார்த்திகேய சிவசேனாபதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கடந்த ஆண்டே திமுகவில் இணைந்தார். கொங்கு மண்டலத்தில் செல்வாக்கான நபராக வலம் வரும் அவர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக போட்டியிட்டு கடும் நெருக்கடி அளித்தார். இருப்பினும் தோல்வியே கிடைத்தது.

மாநிலங்களவையில் மூன்று இடங்கள் காலியாகியுள்ள நிலையில் கார்த்திகேய சிவசேனாபதியை திமுக சார்பில் டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டுவருவதாக கூறப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அடிபடுகின்றன.

கார்த்திகேய சிவசேனாபதி தரப்பில் மேயர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முனைப்பு காட்டுவதாக கூறுகிறார்கள். ஏற்கெனவே போட்டியிட்டு தோல்வியடைந்ததால் இம்முறை கட்டாயம் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்க முயல்வதாக கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான மகேந்திரனும் மேயர் வேட்பாளராக களமிறங்க காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மநீம சார்பில் மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட மகேந்திரன் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்ததால் இருவருக்கிடையே போட்டில் நிலவுவதாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad