'வெயிட் அண்ட் சீ'.. கரூரில் விமான நிலையம் வர போகுதாம்..! அமைச்சர் தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

'வெயிட் அண்ட் சீ'.. கரூரில் விமான நிலையம் வர போகுதாம்..! அமைச்சர் தகவல்

'வெயிட் அண்ட் சீ'.. கரூரில் விமான நிலையம் வர போகுதாம்..! அமைச்சர் தகவல்கரூரில் நெசவாளர், தொழில் முனைவோர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றபின்னர் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
தருமபுரியில் ஆயிரம் ஏக்கரில் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிட்டு வருகிறோம். அதுகுறித்து ஆலோசிக்க விரைவில் டெல்லி செல்வோம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.


விலை வாசி உயர்வு:

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வே காரணம். அதற்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பு. மாநில அரசு அல்ல. நீங்கள் ஒன்றிய அரசைதான் கேட்க வேண்டும்.

நெசவாளர்களுக்கு வீடு கட்டி தருவதால் சங்கங்கள் மட்டுமே பயன்பெறுகின்றன?

அதெல்லாம் இனிமே நடக்காது. பழைய விவகாரங்களை மறந்து விடுங்கள். இந்த ஆட்சியில் அதுபோல நடக்காது. எந்த போலி சங்கங்களும் இனி இயங்காது. அனைத்து நெசவாளர்களுக்கும் உரிய முறையில் சலுகைகள் செல்லும். ஒருவேளை நானே தவறு செய்தாலும், முதல்வர் என் மேல் நடவடிக்கை எடுப்பார்.இலவச மின்சாரம்

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 முதல் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கொடுக்கப்படும்.

கரூரில் விமான நிலையம்

கரூரில் ஜவுளி ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு ஏற்றுமதி முகவர்கள் அதிகரிக்க விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad