காதல் திருமண பிரச்சினைகளில் தீர்வு காண எளிய வழிமுறை இதோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

காதல் திருமண பிரச்சினைகளில் தீர்வு காண எளிய வழிமுறை இதோ!

காதல் திருமண பிரச்சினைகளில் தீர்வு காண எளிய வழிமுறை இதோ!


குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்னை இருந்தாலும் விரைவில் சரியாகிவிடும். ஆனால் சில தம்பதியிடையே அப்படி பிரச்னை விரைவில் தீராது.
காதல் திருமணத்தின் சிக்கல்களை நீக்குவது மட்டுமல்லாமல், பரஸ்பர அன்பை அதிகரிப்பதன் மூலம் இருவரிடையேயான இடைவெளி குறையும்.
அப்படி காதல் திருமணம் செய்தவர்களும் சில பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

காதல் திருமணமோ அல்லது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சில மாதங்கள் எல்லாம் சரியாக சுமுகமாகச் செல்லும். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வதும், பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வது என கொஞ்சம், கொஞ்சமாக தொடங்கிவிடும். என்ன தான் சிறு, சிறு பிரச்னைகள் வந்தாலும், கணவன் - மனைவி இடையே அந்நியோன்னியம் குறையாது.
இது பெரும்பாலான குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்னை இருந்தாலும் விரைவில் சரியாகிவிடும். ஆனால் சில தம்பதியிடையே அப்படி பிரச்னை விரைவில் தீராது.

காதல் திருமணத்தின் சிக்கல்களை நீக்குவது மட்டுமல்லாமல், பரஸ்பர அன்பை அதிகரிப்பதன் மூலம் இருவரிடையேயான இடைவெளி குறையும்.காதல் திருமண வாழ்வில் பிரச்சினைகள் நீங்க மிக எளிய விஷயத்த கடைப்பிடிக்கலாம். உங்களால் முடிந்த அளவு கோதுமை மாவு மற்றும் கடுகு எண்ணெய்யைத் தேவைப்படும், வறியவர்களுக்கு தானம் செய்யுங்கள். காதல் திருமண பிரச்சினைகளை சமாளிக்க இது சிறந்த தீர்வாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஜோதிடத்தின் படி, காதல் திருமண உறவில் பிரச்சினை இருப்பின், அதற்கு நல்ல தீர்வு காண, எலுமிச்சை சிறந்த விஷயமாக இருக்கும். திருமண உறவில் இருக்கும் பிரச்னைகள் தீர ஒரு எலுமிச்சை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளில் எறியுங்கள். இந்த செயல்முறையை நீங்கள் தொடர்ந்து 40 நாட்கள் செய்ய வேண்டும் இப்படி செய்வதால் திருமணத்தில் இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கத் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.
காதல் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டால் அது தீர ஸ்ரீ ராம மந்திரத்தை உச்சரிக்கவும். அதுமட்டுமல்லாமல் முடியும் போதெல்லாம் உங்கள் துணைக்கு பரிசுப் பொருட்களை வாங்கித் தரவும். கூர்மையான பொருட்களையோ, கருமை நிற, நீல நிற பொருட்களை பரிசளிக்க வேண்டாம்.


No comments:

Post a Comment

Post Top Ad