இனி பாஜக கூட்டணியா? திமுக கூட்டணியா? என்பதுதான் - அண்ணாமலை ஓபன் சரவெடி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 17, 2021

இனி பாஜக கூட்டணியா? திமுக கூட்டணியா? என்பதுதான் - அண்ணாமலை ஓபன் சரவெடி

இனி பாஜக கூட்டணியா? திமுக கூட்டணியா? என்பதுதான் - அண்ணாமலை ஓபன் சரவெடி



 தமிழக பாஜக தலைவராக முன்னால் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சென்னையில் பொறுப்பேற்றுக்கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அண்ணாமலை பேசியது தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் தீவிரத்தை வெளிப்படுத்தியது. வருங்காலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் காலமாக அமையும் என்றும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த 150 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள் என்றும் அண்ணாமலை கூறினார். இதை கேட்ட பாஜக தொண்டர்கள் பரவசம் அடைந்தனர். அதனையடுத்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.



அண்ணாமலை அறிக்கை

''தமிழக பாஜகவின் திரளான தொண்டர்களின் கூட்டம் இன்று பேராதரவுடன் ஒரு கடல் போல் பொங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த பெருமுயற்சியால் 20 வருடங்கள் கழித்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம்.

நான்கு என்பது 150 ஆக மாற வேண்டும், நாம் மாற்றி காட்ட வேண்டும். ஒற்றை தலைமையோ, குடும்ப அரசியலோ இல்லாத ஒரே கட்சி பாஜக தான். நம் கட்சியில் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம். பாஜகவில் தமிழகத்திலும், நாடெங்கிலும் தகுதி உள்ளோர் தலைமை பொறுப்பிற்கு தக்க தருணத்தில் சென்றியிருக்கிறார்கள். தலைமை இடம் என்பது மக்களுக்கு சேவை செய்ய வழங்கப்படும் பொறுப்பு. 

திமுகவுக்கு வாக்கு நாணயம் இல்லை

70 நாள் ஆட்சியில் நாம் திமுகவிடம் காண்பது வெறும் தவறான வாக்குறுதிகளும், பொய்யுரைகளும் மட்டுமே, செய்ய முடியாததை செய்வோம் என கூறுவது, சொல்ல வேண்டிய தகவல்களை மக்களிடம் மறைப்பது தேவையற்ற வார்த்தைகளை கொண்டு மக்களை திசை திருப்புவது, பிரிவினைவாதத்தை தூண்டுவது என்று தவறான எல்லாவற்றையும் திமுக செய்து வருகிறது. திமுகவுக்கு வாக்கு நாணயம் இல்லை என்றும் இருக்கப்போவது எனவும் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா

பாஜக திமுகவை போல் பொய் பேசுபவர்கள் கிடையாது. நாம் சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. தமிழக மக்களின் அன்பையும், நம்பிக்கையும்

No comments:

Post a Comment

Post Top Ad