பைக்கில் பின்னால் வந்து சரமாரியாகத் தாக்கிய கும்பல்: கோவையில் பகீர் சிசிடிவி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

பைக்கில் பின்னால் வந்து சரமாரியாகத் தாக்கிய கும்பல்: கோவையில் பகீர் சிசிடிவி!

பைக்கில் பின்னால் வந்து சரமாரியாகத் தாக்கிய கும்பல்: கோவையில் பகீர் சிசிடிவி!


கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, பின்னால் வந்த ஒரு கும்பல் வழிமறித்துள்ளது.
தொடர்ந்து அந்த கும்பல் குறிப்பிட்ட 2 இளைஞர்களை ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் துடியலூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய கும்பல் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் என்பதும் தெரியவந்தது. காயமடைந்த இருவரும் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் வேறு ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad