தூங்கிக் கொண்டிருந்தவர் வீட்டில் புகுந்து 20 சவரன் கொள்ளை: விருதுநகர் சம்பவம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

தூங்கிக் கொண்டிருந்தவர் வீட்டில் புகுந்து 20 சவரன் கொள்ளை: விருதுநகர் சம்பவம்!

தூங்கிக் கொண்டிருந்தவர் வீட்டில் புகுந்து 20 சவரன் கொள்ளை: விருதுநகர் சம்பவம்!


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புது சென்னாகுளம் பகுதி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக 2 மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த சூழலில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றுள்ளார்.
தூங்கிக்கொண்டிருந்த ரமேஷுக்கு நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. எழுந்து வந்த பார்த்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டைக் கொள்ளையடித்து கொண்டிருந்துள்ளனர்.

அதிர்ந்துபோன ரமேஷ் சத்தம் போட்டபடி கொள்ளையரைத் துரத்திச் சென்றுள்ளார். இதற்கிடையே திருடர் பின்புற சுவர் ஏறித் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து வீட்டினுள் வந்து பார்த்தபோது பீரோவிலிருந்த 20 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.சம்பவம் குறித்து உடனடியாக வன்னியம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad