கொங்கு நாடு தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

கொங்கு நாடு தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

கொங்கு நாடு தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!கொங்கு நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை இணைத்துத் தனி யூனியன் பிரதேசம் அமைக்க உள்ளதாகத் தனியார் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் சார்பில்
கோவை, திருப்பூர் உள்ளிட்டவற்றைக் கொங்கு நாடு எனத் தனி மாநிலமாகப் பிரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் இன்று நடைபெற்றது அப்போது கொங்குநாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
வளர்ச்சிப் பாதைக்கு மட்டுமே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல மாநிலங்களைப் பிரித்து இரண்டாவது மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அதேபோல் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு கொங்கு நாட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இங்குள்ள மாவட்டங்கள் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும். சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பல மடங்காக உயரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad