முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்த்த படங்கள் இவைதான் : அமைச்சர் நாசர் பகீர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்த்த படங்கள் இவைதான் : அமைச்சர் நாசர் பகீர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்த்த படங்கள் இவைதான் : அமைச்சர் நாசர் பகீர்

இயக்குனர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் இந்திய சினிமா தாரத்திற்கு பேசப்பட்டு வரும் நிலையில் அதிமுகவினரிடையே விமர்சனம் ஏற்படுத்தியுள்ளது. படத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை மையப்படுத்தி திமுகவுக்கு ஆதரவாக ஆங்காங்கே காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது முழுக்க திமுக பிரச்சார படமாகவே உள்ளதாக முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், '' 30 ஆண்டு கால நல்லாட்சியையே திட்டமிட்டு மறைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்க்கும் விளையாட்டு துறைக்கும் தொடர்பே இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் திமுகவின் பிரச்சாரப்படமாகவே உள்ளது'' என விமர்சித்திருந்தார்.

மா.சுப்ரமணியன்

இதற்கு திமுக அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், நாசர் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியுள்ளனர். முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், '' சார்பட்டா திரைப்படத்தின் விடுபட்ட காட்சிகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் ஜெயக்குமாரே குத்துச்சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சியையும் பாருங்கள் என்று கூறியிருந்தார்.

அமைச்சர் நாசர்

அதனை தொடர்ந்து, அமைச்சர் நாசர் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை மட்டுமே பார்த்து அரசியலுக்கு வந்தவர், அவருக்கு வரலாறு தெரியாது. திமுக நீண்ட வரலாறு கொண்டது என்றும் திமுகவினர் வரலாறு தெரிந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad