சனிக்கிழமையும் அதுவுமா பெருமாள் கோயிலுக்கு சென்ற கனிமொழி மேடம்!
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது வைகுண்டபதி பெருமாள் கோவில். பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் நன்கொடை பெற்று 4 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெருமாள் கோவில் சுற்றியுள்ள பகுதிகளையும், திருப்பணிகள் நடைபெறும் இடங்களையும் பார்வையிட்டு குருக்கள், அதிகாரிகள், ஆகியோரிடம் கோயில் திருப்பணிகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
No comments:
Post a Comment