'இனி அதிமுக அவ்வளோதான்' இங்கு வலுவான தலைவர் இல்லை - பாஜகவே சொல்லிடுச்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

'இனி அதிமுக அவ்வளோதான்' இங்கு வலுவான தலைவர் இல்லை - பாஜகவே சொல்லிடுச்சி

'இனி அதிமுக அவ்வளோதான்' இங்கு வலுவான தலைவர் இல்லை - பாஜகவே சொல்லிடுச்சி


பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் பெரும்பான்மையான சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காமல் போய்விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் குற்றஞ்சாட்டினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டு அதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.
16 தொகுதிகள் கை நழுவி போனது பாஜகவை விட அதிமுகவுக்கே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். கூட்டணி அமைப்பதற்கு முன்பே பாஜகவின் பலத்தை கணித்து தொகுதிகளை வழங்காமல், இப்போது வருத்தப்படுவது அரசியலில் மூத்தவருக்கு அழகல்ல என்று பலரும் விமர்சிக்கின்றனர். இதற்கிடையில், முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பாஜக கே.டி. ராகவன், அதிமுகவின் கடந்த நான்காண்டு செயல்பாடுகள்கூட தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால், கூட்டணி தர்மத்தை மீறி சி.வி. சண்முகம் பேசியதற்கு அதிமுக தலைமைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கணிசமான தொகுதிகளை பெறாததற்கு எங்களிடமும் சில காரணங்கள் உள்ளது. ஆனால், அதை பொதுவெளியில் கூட்டணி தர்மத்தை மீறி பேச முடியாது என கூறினார்.அதிமுக பொறுத்தவரை ஜெயலலிதா மரணத்துக்கு முன்னாள், பின்னால் என்ற வித்தியாசங்கள் நிறையவே உள்ளன. ஒரு கட்சிக்கு ஒரு தலைமை என்று இருக்காமல், கட்சியை சமநிலையாக வைத்துக்கொள்ள பதவிகளை வைத்து முட்டுக்கொடுத்து தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தி, குழப்பி அதிமுகவின் கட்டமைப்பை உலுக்கினார்கள் புதிதாக தோன்றிய ஆட்சியாளர்கள். எதிர்க்கட்சியாக அதிமுக மாறிய பின்னர் ஆக்டிவாக இருந்த நிர்வாகிகளின் 'last seen' கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad