1 லிட்டர் பெட்ரோல் இலவசம்: அசத்தும் சென்னை பிரியாணி கடை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

1 லிட்டர் பெட்ரோல் இலவசம்: அசத்தும் சென்னை பிரியாணி கடை!

1 லிட்டர் பெட்ரோல் இலவசம்: அசத்தும் சென்னை பிரியாணி கடை!


கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மலை போல உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை ரூ.100க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னையிலுள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை ஒன்றில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரூ.750க்கு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த டோக்கனை கொடுத்து அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக் கொள்ளும்படி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad