ரெய்டுக்கு ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி? அலறும் அதிமுக மாஜி அமைச்சர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

ரெய்டுக்கு ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி? அலறும் அதிமுக மாஜி அமைச்சர்கள்!

ரெய்டுக்கு ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி? அலறும் அதிமுக மாஜி அமைச்சர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தூசி தட்டப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டிய சூழல் நிலவியதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீதான நடவடிக்கைகள் வேகமெடுக்கவில்லை. இருந்தபோதும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

தற்போது தமிழ்நாடு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் அதிமுக மாஜிக்கள் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளனர். எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் குறித்த வழக்குகள் ஒரு பக்கம் போய்கொண்டிருக்க, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் என 26 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜி அமைச்சர்கள் ஊழல் புகார்கள் குறித்து பெரிய லிஸ்டே திமுகவிடம் இருக்கும் போது விஜயபாஸ்கர் எப்படி முதலில் குறிவைக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது.

கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வீழ்த்தி வெற்றி பெற்று தற்போது அமைச்சராகியுள்ளார்

செந்தில் பாலாஜி. இருவருக்குமான ஈகோ யுத்தத்தின் காரணமாகவே விஜயபாஸ்கர் குறி வைக்கப்பட்டிருப்பாரோ என்ற பேச்சு எழுந்தது. அந்த வகையில் திமுக உயர்மட்டம் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தால் முக்கிய தகவல் ஒன்று வெளிவருகிறது.லஞ்ச ஒழிப்புத்துறை என்பது முதல்வரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட துறை. ஆனால் அத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் செந்தில் பாலாஜியோடு நெருக்கம் பாராட்டுகிறார்களாம். தங்களுடைய ஆபரேஷனுக்கு செந்தில் பாலாஜி கூறும் தகவல்கள் பெரும் பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவில் இதற்கு முன் இருந்திருப்பதால் மாஜி அமைச்சர்கள் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்.

எந்தெந்த துறைகளில் ஊழல் நடந்துள்ளது, எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிகிறது, ஆனால் அந்த பணம் யாருடைய பெயரில் சொத்தாக மாறியுள்ளது, எந்த ஊர்களில் பதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் செந்தில் பாலாஜிக்குதான் தெரியும் என்கிறார்கள். இதனால் லஞ்ச ஒழிப்புத் துறையும் செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து பேசிவருவதாக கூறுகிறார்கள்.



அதேசமயம் இந்த விவகாரத்தில் எதிர் தரப்பு ஆளுங்கட்சியோடு டீல் பேச நினைத்தாலும் செந்தில் பாலாஜியே இணைப்பு பாலமாக செயல்படுகிறார் என்றும் ஒரு தகவல் வந்துகொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad