உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: மக்களிடம் வைக்கும் பிரதான கோரிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: மக்களிடம் வைக்கும் பிரதான கோரிக்கை

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: மக்களிடம் வைக்கும் பிரதான கோரிக்கை


தமிழகத்தில் கடந்த ஆண்டு புதியதாக பிரித்த மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளகுறிச்சி மாவட்டத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சன்முகம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் கலந்து கொண்டார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு‌.க பல கவர்ச்சி திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்பது மட்டுமே உன்மை , இதனை மக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad