கிடா வெட்டி முனீஸ்வரன் கோயிலில் வால்பாறை எம்எல்ஏ... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

கிடா வெட்டி முனீஸ்வரன் கோயிலில் வால்பாறை எம்எல்ஏ...

கிடா வெட்டி முனீஸ்வரன் கோயிலில் வால்பாறை எம்எல்ஏ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு முனீஸ்வரன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கோயிலில் சிறப்பு வழிபாடுகள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த சூழலில் தற்போது ஊரடங்கு தளர்வுடன் ஆலய வழிபாடுகள் செய்யத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அதிமுகவின் வால்பாறை நகரச்செயலாளர் மயில் கணேசன் சார்பாகக் குறிப்பிட்ட கோயிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு இன்று செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கலந்து கொண்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஆர்ஆர் பெருமாள், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன், பேரவை மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் நரசப்பன், நகரதுணைச் செயலாளர் பொன் கணேசன், நிர்வாகிகள் சுடர் பாலு, சோலையாறு டேம் ஜார்ஜ், சௌந்தர் ராஜன், யூசுப், எஸ்கேஎஸ் பாலு, எம்ஆர்எஸ் மோகன், சசிக்குமார் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad