வாவ்! "பக்கா" ப்ளான் போட்ட மம்தா பானர்ஜி! அடுத்து நடக்கப் போவது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

வாவ்! "பக்கா" ப்ளான் போட்ட மம்தா பானர்ஜி! அடுத்து நடக்கப் போவது என்ன?

வாவ்! "பக்கா" ப்ளான் போட்ட மம்தா பானர்ஜி! அடுத்து நடக்கப் போவது என்ன?


மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில், சட்ட மேலவை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. எனினும், அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாதவர் முதலமைச்சராக பதவி ஏற்றால், ஆறு மாதங்களுக்குள், ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். தற்போதைய சூழலில், இடைத்தேர்தல்களை நடத்துவது முடியாத காரியம் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. இதன்படி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவது சாத்தியம் இல்லாததாக இருந்தது.
இந்நிலையில் இன்று, கொல்கத்தாவில் உள்ள மாநில சட்டப்பேரவையில், சட்ட மேலவை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சட்டப்பேரவையில் தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, 196 எம்.எல்.ஏ.,க்களும், எதிராக, 69 எம்.எல்.ஏ.,க்களும் வாக்களித்தனர்.

இதன்படி, இடைத்தேர்தலை சந்திக்காமல் சட்டமேலவை உருவாக்கி, சட்ட மேலவை உறுப்பினராகி விட, மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் வழங்குவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்றால் சட்ட மேலவை உருவாக்கப்படும் என, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 1969ம் ஆண்டு சட்ட மேலவை கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad