ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனை அளிக்கிறது: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனை அளிக்கிறது: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம்

ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனை அளிக்கிறது: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம்

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனை அளிப்பதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பீமா கோரேகனில் நடந்த கலவரத்திற்கு காரணமாக இருந்தவர்கள் என்று ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட 15 மனித உரிமை போராளிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த மே மாதம் 29ம் தேதி, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

இந்நிலையில், ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஸ்டேன் சுவாமியின் மரணம் தீவிர சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீமா கோரேகன் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி மற்றும் 15 மனித உரிமை போரளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா.,வின் உயர் ஆணையர் மைக்கேல் பாச்லேட் மற்றும் ஐ.நா.,வின் மனித உரிமை வல்லுநர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

ஸ்டேன் சுவாமி தொடர்ந்து பல முறை ஜாமின் கேட்டு அதை நீதித் துறை மறுத்துள்ளது. தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக எவரும் கைது செய்யப்படக் கூடாது. ஒரு மனித உரிமை போராளி மீது தேசத் துரோக வழக்கு போடப்படுவது சரியா?

எந்த பாரபட்சமும் இல்லாமல் கொரோனா காலத்தில் அனைத்து கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். இனியாவது தனது கருத்தை வெளிப்படுத்தும், நபர்கள் கைது செய்யப்படாமல் இந்திய அரசு பார்த்து கொள்ள வேண்டும் என்பதை ஐ.நா., மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad