ஸ்டேன் சுவாமி மரணம்: சோனியா, ஸ்டாலின், மம்தா உள்ளிட்டோர் ஜனாதிபதிக்கு கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

ஸ்டேன் சுவாமி மரணம்: சோனியா, ஸ்டாலின், மம்தா உள்ளிட்டோர் ஜனாதிபதிக்கு கடிதம்!

ஸ்டேன் சுவாமி மரணம்: சோனியா, ஸ்டாலின், மம்தா உள்ளிட்டோர் ஜனாதிபதிக்கு கடிதம்!


மனித உரிமை போராளி ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றமிழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சோனியா காந்தி, மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி, பலமுறை முறையிட்டும், அவருக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. மேலும் அவர் நீர் அருந்துவதற்கு ஸ்ட்ரா வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அளவில் பலர் இதற்காக குரல் எழுப்பிய பிறகே அவருக்கு ஸ்ட்ரா வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக சிறைக் கைதிகள் இருந்த தலோஜா சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என பாதிரியார் ஸ்டேன் சுவாமி கோரிக்கை வைத்தும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அது காலதாமதமான நடவடிக்கை என்பதால் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இதனால் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, ஜாமினில் கூட விடுவிக்காமல் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைத்திருந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்தியாவின் குடியரசுத் தலைவரான நீங்கள் உங்களுடைய அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் பாதிரியாரின் மரணத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad