பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 7, 2021

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை!

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை!


ழுப்புரம் மாவட்டம், வானுாரில் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம். அவர்கள் கூட்டணியால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்து விட்டோம்” என்றார்.

சிவி சண்முகத்தின் இந்த பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அதிமுக தலைமையில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது. அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.



தேர்தல் முடிவுகள் சோர்வை ஏற்படுத்தியிருந்தாலும் கழகத் தோழர்களின் பொது வாழ்வு எனும் புனிதப் பயணம் வீருநடை போடுகிறது. நாம் ஆற்ற வேண்டிய பணிகள் அணிவகுத்து நிற்கின்றன. அரசியல் வாழ்வு என்பது இடைநிற்றல் இல்லாத லட்சியப் பயணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad