பாமக ராமதாசை தூக்கிக் கொண்டாடும் விழுப்புரம் கட்சியினர்: பட்டாசு வெடித்து ஆரவாரம்!
திண்டிவனத்தில் பாமக சார்பில் 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதையொட்டி ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து இன்று அரசாணை வெளியிட்டது. இந்த சூழலில் பாமகவினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
இதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் பாமகவினர் மாநிலத் துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில் திண்டிவனம் காமராஜர் சிலை முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பின்னர் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று காந்தி சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாசிற்க்கு நன்றித் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். நிகழ்ச்சியில் பாமகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment