கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் சொல்லப் போகும் குட் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் சொல்லப் போகும் குட் நியூஸ்!

கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் சொல்லப் போகும் குட் நியூஸ்!திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகள் சில நிறைவேற்றப்பட்டிருந்தாலும் முக்கியமான வாக்குறுதிகள் எப்போது செயல் வடிவம் பெறும் என எதிர்பார்த்துள்ளனர்.
கொரோனா நிவாரணத் தொகை 4000, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட்டது.
கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், விவசாயக் கடன், நகைக்கடன், கல்விக் கடன் தள்ளுபடி ஆகிய அறிவிப்புகள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. எதிர்பார்த்ததைவிட நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். அதனாலே பெட்ரோல், டீசல் விலையை இப்போது குறைக்க முடியாது என கூறினார்.

இந்நிலையில் மற்ற அறிவிப்புகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்த நிலையில் விவசாயக் கடன், நகைக்கடன், கல்விக் கடன் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகரை தூக்கும் திமுக? இதுக்கு பின்னால் இப்படி ஒரு கணக்கா?
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளமு.க.ஸ்டாலின் விவசாயக் கடன், கல்விக் கடன் கூட்டுறவுச் சங்கங்களில் வைத்துள்ள நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கடந்த கால திமுக ஆட்சியில்தான் சாமானிய மக்களும் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. தற்போது, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் நகைக் கடன் மட்டுமின்றி அனைத்து வகையான கடன்களும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad