டாஸ்மாக் கடை பூட்டை திறந்து சரக்கு, பணம் கொள்ளை: ஏஎஸ்பி நேரில் சென்று விசாரணை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 4, 2021

டாஸ்மாக் கடை பூட்டை திறந்து சரக்கு, பணம் கொள்ளை: ஏஎஸ்பி நேரில் சென்று விசாரணை!

 டாஸ்மாக் கடை பூட்டை திறந்து சரக்கு, பணம் கொள்ளை: ஏஎஸ்பி நேரில் சென்று விசாரணை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டையூர் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில், பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் அருகே தாயில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோட்டையூர் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள அரசு மதுபான கடையின் ஊழியர் வியாபாரம் முடித்து கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.

வழக்கம் போல் கடையைத் திறப்பதற்காகக் காலை வந்தபோது கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாஸ்மாக் ஊழியர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 40க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும் ரூ. 5 ஆயிரத்து 700 ரொக்கம், திருடு போனது தெரியவந்துள்ளது.


டாஸ்மாக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து தடயவியல் நிபுணர்கள் கைரேகை ஆய்வு நடத்தினர். அதேபோல் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு சாத்தூர் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad