அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரால் அருப்புக்கோட்டைக்கு வந்தது 5 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டிகள் 3! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 4, 2021

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரால் அருப்புக்கோட்டைக்கு வந்தது 5 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டிகள் 3!

 அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரால் அருப்புக்கோட்டைக்கு வந்தது 5 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டிகள் 3!


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட 3 ஆக்ஸிஜன் செறிவூட்டி களை வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இராமசந்திரன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரனிடம் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வாழும் கலை அமைப்பு(The Art of Living) மற்றும் இண்டர்நேசனல் அசோசியேசன் ஆஃப் ஹ{ International Association Of Human Values) ஆகிய நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட 5 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட 3 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

இதை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரனிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை தெற்கு தெரு தேவாங்கோர் துவக்கப்பள்ளி மற்றும் சின்னபுளியம்பட்டி முனியாண்டி தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad