மூனு நாள் ஆச்சு: குஷ்பு சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

மூனு நாள் ஆச்சு: குஷ்பு சொன்ன தகவல்!

மூனு நாள் ஆச்சு: குஷ்பு சொன்ன தகவல்!


நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் ஆக்டிவாக இயங்கி வருபவர். ட்விட்டரில் குஷ்புவுக்கு சுமார் 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இந்த நிலையில், குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு ஒரு பெயருடன் படமும் மாற்றப்பட்டுள்ளது. அதில் இருந்த அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது.

இதை செய்தது ஒரு நபரா அல்லது குழுவா என்ற விவரங்கள் தெரியவில்லை. குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது ட்விட்டர் கணக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், கடந்த சில தினங்களாக அதில் மேற்கொள்ளப்படும் பதிவுகள் தன்னுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad