துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமைப் புகார்... உடன்பிறப்புகள் கலக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமைப் புகார்... உடன்பிறப்புகள் கலக்கம்!

துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமைப் புகார்... உடன்பிறப்புகள் கலக்கம்!


வேலூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மீது டெல்லியிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், நில அபகரிப்பு மற்றும் சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்பிரமணியின் புகாரில், அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் சிலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

திமுக பொதுச் செயலாளரும், சீனியர் அமைச்சருமான துரைமுருகன் மீதான சாதிய வன்கொடுமை புகார் காரணமாக உடன்பிறப்புகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad