தேனி விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விட்ட அழைப்பு!
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் வரும், 30ஆம் தேதி ஜூலை, காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து கொண்டு, காணொலி காட்சி மூலம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
மேலும் தங்களது குறைகளை மனுக்களாக அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் வழங்கலாம். விவசாயிகளிடம் பொப்படும் மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் காணொலி காட்சி மூலம் நடைபெறும் விவசாயிகள் குறை திக்கும் கட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறவும்.
மேலும், நுண்ணி பாசன திட்டத்தின் கிழ் பதிவேற்றம் செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் , தேவையான ஆவணங்களான புகைப்பட நகல் , ஆதார்காடு நகல் , குடும்ப அட்டை நகல , சீட்டா நகல் , சிட்டா வரைபடம் , அடங்கல் மற்றும் சிறு குறு விவசாய சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களோடு சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குதா அவைலகத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment