அதிமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் திமுகவுக்கு போவாங்களாம்... சொல்கிறார் பிரபல நடிகர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

அதிமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் திமுகவுக்கு போவாங்களாம்... சொல்கிறார் பிரபல நடிகர்!

அதிமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் திமுகவுக்கு போவாங்களாம்... சொல்கிறார் பிரபல நடிகர்!


அதிமுக அபிமானியான நடிகர் ஆனந்தராஜ், சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் கூறியது:

தமிழ்நாட்டை யாருக்கெல்லாம் பிரித்து தரலாம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற பேச்சை யார் எடுத்தாலும், பதவியை துறந்துவிட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்கும்போது சொல்ல வேண்டும். இப்போது சொல்லக்கூடாது.

நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரிவினை கோஷத்தை எழுப்பலாம். கொங்கு மக்களை பற்றி அரசியல்வாதிகளை விட எனக்கு நன்றாக தெரியும். கொங்குநாடு என்பது மக்களின் உணர்வு அல்ல.

மார்க்கண்டேய அணையை நம் கண்களுக்கு தெரியாமலேயே கட்டி உள்ளனர். கிருஷ்ணகிரியில் இருக்கும் கே.பி.முனுசாமிக்கு கர்நாடக அரசு அணை கட்டியது எப்படி தெரியாமல் போனது? அவர் இதுகுறித்து விளக்கம் தர வேண்டும்.

அதிமுகவில் என்ன தவறு நடக்கிறது என்று எனக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாக அதிமுகவில் இருந்து இன்னும் பலர் திமுகவில் இணைய காத்திருக்கின்றனர்.

நான் திமுகவில் இணைந்தால் அதில் என்ன தவறு? நான் திமுகவில் இணைவதா? வேண்டாமா? என்று அவர்கள் தான் விரும்ப வேண்டும். காலம் கனியும்போது நல்ல முடிவை எடுப்பேன்.

இயக்குநர்களுக்கு கற்பனை சுதந்திரம் தேவை. ஒளிப்பதிவு திருத்த சட்டத்தில் நிறைய தவறு உள்ளது என்று நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad