"ஜிகா" வைரஸ் எதிரொலி - தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதார செயலர் உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

"ஜிகா" வைரஸ் எதிரொலி - தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதார செயலர் உத்தரவு

"ஜிகா" வைரஸ் எதிரொலி - தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதார செயலர் உத்தரவு


ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என, சுகாதாரத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, கேரள- தமிழக எல்லைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
சுகாதாரத் துறை பணியாளர்கள், வீடு, வீடாக சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், பேருந்து நிலையங்கள், மூடப்படாத கால்வாய்கள், தேங்கியிருக்கும் நீர், பழைய டயர், ட்ரம் உள்ளிட்ட பொருட்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் பகுதிக்கு உட்பட்டவற்றில் உடனடியாக தூய்மைப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் ஜிகாவோ, டெங்குவோ வரும் வரை காத்திருக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தம், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad