கருணாநிதி படத்தை வைத்து சேலம் அதிமுக அரசியல் பிரச்சினை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 14, 2021

கருணாநிதி படத்தை வைத்து சேலம் அதிமுக அரசியல் பிரச்சினை!

கருணாநிதி படத்தை வைத்து சேலம் அதிமுக அரசியல் பிரச்சினை!


சேலம் மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டம் நாட்டாமை கழக வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் ரேவதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சி குறித்தும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் அதற்கான நிதி காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் படத்திற்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த மாவட்ட ஊராட்சி செயலாளர் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் வழிகாட்டுதலோடு இந்த படம் வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுக உறுப்பினர்கள் கருணாநிதியின் புகைப் படத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அதிமுக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி புகைப்படங்களையாவது வைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்களின் ஒருமித்த குரலோடு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் கூட்டத்திலிருந்த திமுக உறுப்பினர்கள் வாய்மூடி மௌனம் சாதித்தனர்.

கடந்த காலங்களில் திமுக ஆட்சியின்போது முதலமைச்சராகவிருந்த எடப்பாடி பழனிசாமியுடன், ஜெயலலிதாவின் உருவப்படமும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்தது. அது பிரச்சினையாக மாறாத நிலையில், கருணாநிதி படத்தை வைத்து அதிமுக அரசியல் செய்வது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad