கொங்கு நாடு முதல்வரா அண்ணாமலை? பாஜக கொடுக்கும் அலப்பறை!
கொங்கு நாடு கிளப்பிவிட்டு இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் எல்.முருகன். அவர் வகித்துவந்த பாஜக மாநிலத் தலைவர் பதவி காலியான நிலையில் அண்ணாமலை அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார்.
இன்று ஜூலை 16ஆம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் கோவையிலிருந்து நேற்று சென்னைக்கு யாத்திரை போல் சாலை மார்க்கமாக கிளம்பிவிட்டார் அண்ணாமலை. ஏற்கெனவே கொங்கு நாடு கோரிக்கையை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் கோவையிலிருந்து வழியெங்கும் தமது கட்சித் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நாமக்கலுக்கு அவர் வந்த போது மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணாமலையை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒருபகுதியாக நாமக்கல் நகரின் பல முக்கிய சாலை சந்திப்புகளில் பாஜக கொடியும், அண்ணாமலையை வரவேற்று பேனர்களும் வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment