கோவைக்குத் திமுக காட்டும் ஸ்பெஷல் கவனிப்பு: கொங்குநாடு பருப்பு வேகாதோ? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 14, 2021

கோவைக்குத் திமுக காட்டும் ஸ்பெஷல் கவனிப்பு: கொங்குநாடு பருப்பு வேகாதோ?

கோவைக்குத் திமுக காட்டும் ஸ்பெஷல் கவனிப்பு: கொங்குநாடு பருப்பு வேகாதோ?



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழிலாளர் திறன் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவெ கணேசன் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் வழியாக அமைச்சர் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதில் சிறு-குறு தொழிற்துறையினர் தாங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் குறித்து அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

முன்னதாக விபத்து மற்றும் இயற்கை மரணங்களான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சத்து 57 ஆயிரத்திற்கான காசோலை தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் வேலை கோரியிருந்த 10க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு பணி நியமனம் ஆணை வழங்கினார். தொடர்ந்து அவர் மேலும் சிலருக்கு மேற்படிப்பிற்கான உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக துணைப்பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்‌ஸ், கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் பொன்னுச்சாமி, தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad