அபுதாபி சர்வதேச வேட்டை கண்காட்சியில் பால்கன் பறவைகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

அபுதாபி சர்வதேச வேட்டை கண்காட்சியில் பால்கன் பறவைகள்!

அபுதாபி சர்வதேச வேட்டை கண்காட்சியில் பால்கன் பறவைகள்!



அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பறவையான பால்கன் பறவைகள் கலந்து கொள்ளவுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பறவையான பால்கன் பறவைகள் தமிழில் வல்லூறு, ராஜாளி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. அந்நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் இந்த பறவைகளை வளர்க்கும் பழக்கமும் உண்டு.

இந்தப் பறவைகள் தன் இரையை பிடிக்கும் போது மணிக்கு 250 முதல் 300 கி.மீ. வேகத்தில் பறக்கிறது. இரையை நெருங்கும் கடைசி வினாடிகளில் மணிக்கு 400 முதல் 500 கி.மீ. வேகத்தில் பறக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சர்வதேச கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பால்கன் பறவைகளுக்கான நவீன வேட்டை பயிற்சி தொடங்கியுள்ளது. இதுவரை இந்த பறவைகளுக்கு வேட்டை பழகுவதற்காக ஏதாவது ஒரு சிறிய இறந்த பறவையின் பதப்படுத்தப்பட்ட இறகுகளை ஒரு நீளமான கயிற்றில் இணைத்து அதனை எடுத்துக்கொண்டு ஓடுவது அல்லது சுற்றுவதன் மூலம் பறவைக்கு வேட்டை கற்று கொடுக்கப்படுகிறது.

ஆனால், தற்போது அதில் நவீன முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேடியோ அலைவரிசையில் இயங்கும் சிறிய விமானங்கள் பால்கன் பறவையின் வேட்டை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உருவத்தில் பால்கன் பறவையின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த விமானத்தை பால்கன் பறவைகள் துரத்தி சென்று பிடிப்பதன் மூலம் அதற்கு வேட்டை கற்று தரப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad