உத்தரகண்ட் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் புஷ்கர் சிங்!
உத்தரகண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவி ஏற்க உள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரத் சிங் ராவத், நேற்று தனது பதவியை, ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று, டேராடூனில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, பா.ஜ.க. - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க., சட்டப்பேரவைக் குழுத் தலைவராக, கட்டிமா தொகுதி எம்.எல்.ஏ., புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் பேபி ராணி மயுராவை சந்தித்து, பா.ஜ.க., சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை, புஷ்கர் சிங் தாமி வழங்கினார். மேலும், ஆட்சி அமைக்கவும் உரிமைக் கோரினார்.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக, புஷ்கர் சிங் தாமி நாளை மாலை 6 மணி அளவில் பதவி ஏற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் பேபி ராணி மயுரா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவருடன், புதிய அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளது
No comments:
Post a Comment