ஆகஸ்ட் 15: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

ஆகஸ்ட் 15: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!

ஆகஸ்ட் 15: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1 ஆயிரத்து 896 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,090 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 88 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 216 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 19 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad