செப்., 1ல் தமிழகப் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது அலையின் சீற்றம் பெரிதும் தணிந்துள்ளது. கடந்த ஜூலை 19ஆம் தேதி இரண்டாயிரத்திற்கும்
அதிகமான எண்ணிக்கையில் நோய்த்தொற்று பதிவானது. இதையடுத்து படிப்படியாக குறைந்து தினசரி நோய்த்தொற்று தற்போது 1,700க்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1,668 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு முடிவு
1,887 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில்,
வழிகாட்டு நெறிமுறைகள்
பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் மட்டும் வகுப்பறைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி, கைகழுவும் வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாக அமைச்சர், சுகாதாரத்துறை வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகள் திறப்பு குறித்தும், தியேட்டர்கள் திறப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment