இன்றைய ராசிபலன் (26 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 26 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

இன்றைய ராசிபலன் (26 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 26

இன்றைய ராசிபலன் (26 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 26

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...
மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் மேன்மை கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக உணவுத்துறை சுற்றுலாத்துறை கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி தரும் நாளாக இன்றைய நாள் அமையும்.



எதிர்பார்த்த தனவரவு உண்டு மனைவி உறவு மேம்படும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் வயதானவர்களுக்கு உடல் நலம் சீராக இருந்துவரும். உங்கள் பேச்சிற்கு மரியாதையும் அதிகரிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு.

ரிஷபம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி கொள்வீர்கள்.

உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பும் அதிகம். வாகன வகை உணவு தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் ஒருசிலர் புதிய வேலைவாய்ப்புகளை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்


நண்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்களையும் புது முயற்சிகளையும் தவிர்த்துக் கொள்வது தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து உங்களை வெளிக்கொண்டுவரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

கடகம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது. தனவரவை அதிகப்படுத்தும். செய்யும் தொழிலில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.



வங்கி தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.

சிம்மம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் அடைவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்கள்.



அவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் சொந்த தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும் சுயதொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது மாணவர்களின் கல்வி பளிச்சிடும்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். சற்று அலைச்சல்கள் இருந்தாலும் காரிய வெற்றி உண்டாகும் எதிர்பார்த்த பணம் வரும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகளை ஏற்றுவது சற்று காலதாமதம் ஆகும்.



உடல்நலனில் சற்று கவனம் தேவை. குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம் வாகன வகை தகவல் தொழில்நுட்பத் துறை மீடியா துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்.துலாம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு மிகச்சிறந்த நாடாகவே இருக்கும். நீங்கள் எடுக்கின்ற புது முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.



உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய பேச்சு வார்த்தைகளும் நிகழ்வுகளும் மனதிற்கு சந்தோஷம் தருவதாக அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை அல்லது நீங்கள் விருந்தினராக செல்வது போன்ற இனிய நிகழ்வுகள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேம்படும்.

விருச்சிகம்


நண்பர்களுக்கு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கிடைக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மிகுந்த முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
தனுசு


அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வாகன வகை சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு. உணவு தொழில் சுற்றுலா துறை சேவைத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும்.



கணக்குத்துறை சீருடை பணியாளர்கள் மருத்துவத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். தொழிலை வெற்றிகரமாக முன்னேற்றி செல்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

மகரம்


நேயர்களுக்கு இன்றைய நாள் வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும். உங்கள் ராசிக்கு எதிர்பார்த்த பணம் வரும். கடனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றி கொடுக்கும்.



சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொள்ளும். சிறந்த நாளாகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. சேவை துறை மற்றும் உணவுத்துறை சுற்றுலாத்துறை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல பெயரை ஈட்டக்கூடிய நாள் இன்றைய நாள் ஆகும்.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தகவல்களும் வந்து சேரும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

சொந்தத் தொழில் சிறப்பான மென்மை பெறும். சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். பிரயாணங்கள் தொடர்பான திட்டமிடுதல் இருக்கும்.

மீனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். குடும்பத்தில் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கிடைக்கும் திடீர் தனவரவு ஏற்படும்.



சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். அது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும் வீட்டிற்கு தேவையான நல்ல பொருட்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டு.


No comments:

Post a Comment

Post Top Ad