தமிழக பாஜகவில் அரங்கேறும் சம்பவங்கள்: அத்வானியை நினைவு கூர்ந்த மைத்ரேயன்!
தமிழக பாஜக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று நேற்று வெளியாகியது. இதையடுத்து, தனது கட்சிப் பொறுப்பை ராகவன் ராஜினாமா செய்தார். அந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்பவர் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக
கூறினார்.
ஆனால், வீடியோவை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் மதன் மறுத்துடன் வீடியோவை வெளியிட்டு விட்டதாக அறிக்கை மூலம் அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனை அவர் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையிடம் வீடியோவை
காண்பித்து அவரது ஒப்புதலுடனேயே வீடியோவை வெளியிட்டதாக கூறி, அண்ணாமலையை சந்தித்தபோது, அவருடன் நடைபெற்ற உரையாடல் என்று ஆதாரமாக மற்றொரு வீடியோ ஒன்றை மதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், பாஜக மூத்த தலைவர் அத்வானியை நினைவு கூர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், “25 ஆண்டுகளுக்கு முன். நான் பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த நேரம். அன்றைய தேசியத் தலைவர் அத்வானி சென்னை
வந்திருந்தார். நிர்வாகிகளுடன் பல விஷயங்கள் குறித்து பேசினார். பொதுவாழ்வில் தூய்மை - Probity in public life பற்றி அவர் சொன்ன உதாரணம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment