ஆகஸ்ட் 31: மாத கடைசியில் தமிழக கொரோனா நிலவரம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

ஆகஸ்ட் 31: மாத கடைசியில் தமிழக கொரோனா நிலவரம்..!

ஆகஸ்ட் 31: மாத கடைசியில் தமிழக கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,14,872 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 5,44,153 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 533961 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,36,077 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,31,783 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,266
பேர் பலியாகியுள்ளனர்.செங்கல்பட்டில் இன்று 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,61,860 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,431
பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,50,437 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,14,25,219 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,725 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,63,101 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,921 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad