பாராலிம்பிக்கில் வெள்ளி: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

பாராலிம்பிக்கில் வெள்ளி: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பாராலிம்பிக்கில் வெள்ளி: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு 2 கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார்.

இந்த ஆண்டுக்கான பாராலிம்பிக்கில் இந்தியாவுக்க ு இதுவரை 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன. வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு, 2 கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad