500 ரூ கொடுத்தா, ஒரு நாள் ஜெயில் வாழ்க்கை: சூப்பர் திட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

500 ரூ கொடுத்தா, ஒரு நாள் ஜெயில் வாழ்க்கை: சூப்பர் திட்டம்!

500 ரூ கொடுத்தா, ஒரு நாள் ஜெயில் வாழ்க்கை: சூப்பர் திட்டம்!

நமது அன்றாட வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டால், நினைத்ததை செய்ய முடியாமல் தவிப்பு ஏற்பட்டால் உடனே வாய் முணுமுணுப்பது ‘என்ன வாழ்க்கை இது.. இதுக்கு ஜெயில் வாழ்க்கை தேவலை’ என்பதாக இருக்கும்.
அப்படி அலுத்துக்கொள்பவர்கள் ஜெயில் வாழ்க்கையை அனுபவித்தவர்களா என்றால் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. பின்னர் ஏன் அப்படி ஒரு கமெண்ட் அவர்களிடமிருந்து வருகிறது என்று கேட்கலாம். அதற்கு, ‘மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தா செத்துருவோம் அப்படிங்குறதுக்கு அனுபவம் தேவையில்லை’ என சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் போல அவர்கள் நச் என ஒரு பஞ்ச் சொல்வார்கள்.

இனி அப்படி சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. 500 ரூபாய் கொடுத்தால் ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிடலாம். கர்நாடக மாநிலம் பெலகாவி மத்திய சிறையில் 500 ரூபாய் செலுத்தினால், சிறைக் கைதியை போல ஒரு நாள் உள்ளே இருக்கலாம் என்ற புதுமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


1923ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெலகாவி இண்டல்கா மத்தியசிறை கர்நாடகாவின் பழமையானசிறைகளில் ஒன்று. சுதந்திரப்போராட்ட காலத்தில் தொடங்கி தற்போது வரை முக்கியப் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பழமையான சிறையை பார்வையிட அனுமதி கோரி நாள்தோறும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளனவாம்.

அதனை கருத்தில் கொண்டு ‘சிறையில் ஒரு நாள்’ என்ற சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் ரூ. 500செலுத்தினால் பெலகாவி சிறையில் 24 மணி நேரம் கைதியை போல வாழலாம். உள்ளே வருபவர்களுக்கு கைதி எண், கைதிக்கான சீருடை, சிறை அறை எண் உள்ளிட்டவை வழங்கப்படும்.காலை 5 மணிக்கு தேநீர், 6.30 மணிக்கு காலை சிற்றுண்டி,11 மணிக்கு பகல் உணவு, மாலை 7 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். கைதிகளைப் போலவே சுற்றுலாப் பயணிகளுக்கும் தோட்டத்தொழில், சமைத்தல், தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் அளிக்கப்படும். வார இறுதி நாட்களில் சிறைக்கு வருவோருக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவு பரிமாறப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad