வெளியானது சீயான் 60 ஃபர்ஸ்ட் லுக்: லீக்கான 'மகான்' தான் தலைப்பே
ஜகமே தந்திரம் படத்தை அடுத்து விக்ரம், த்ருவ் உள்ளிட்டோரை வைத்து
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படத்தை சீயான் 60 என்று அழைத்தனர். படப்பிடிப்பை ஆகஸ்ட் 14ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
மேலும் சுதந்திர தினத்தன்று
சீயான் 60 அப்டேட் வரும் என்று அறிவித்தார்கள். ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தபோது ஆகஸ்ட் 20ம் தேதி சீயான் 60 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் என்பதை விக்ரமின் ஸ்டைலான புகைப்படத்துடன் அறிவித்தார்கள்.
இந்நிலையில் அறிவித்தபடி அப்டேட் கொடுத்துவிட்டனர். படத்திற்கு மகான் என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
போஸ்டரில் விக்ரம்
வித்தியாசமாக இருக்கிறார். சீயான் 60 படத்தின் தலைப்பு மகான் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் கசிந்தது. இந்நிலையில் அதையே தான் தலைப்பாக அறிவித்திருக்கிறார்கள்.
மகான் படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment