அவையிலிருந்து வெளியேறிய எடப்பாடி: காரணம் இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

அவையிலிருந்து வெளியேறிய எடப்பாடி: காரணம் இதுதான்!

அவையிலிருந்து வெளியேறிய எடப்பாடி: காரணம் இதுதான்!

விழுப்புரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைத்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துற ை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் விழுப்புரத்தில் துவங்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் அம்மா பெயரில் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதற்கு விளக்கம் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயரளவுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைத்து இருப்பதாக தெரிவித்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்த முன்னாள் முதலமைச்சர் அம்மா பெயரில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை தொடர்ந்து செயல்பட சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைந்து இருக்கிறது” என குற்றம் சாட்டினார்

“விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை தொடர்ந்து செயல்பட அறிவுறுத்தலாம். ஆனால் திமுக அரசு தொடராது என தெரிவித்து அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அரசு செயல்படுகிறது. அம்மா இருக்கும்போது துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாகவும், தமிழகம் முழுவதும் கல்வி தரத்தை உயர்த்தினார். அவரதுஆட்சியில் தான் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்விக்கு அதிகமான நிதியை ஒதுக்கி கல்வித் தரத்தை உயர்த்தினார்” என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad