இதை ஏற்கவே முடியாது, மீண்டும் சேர்த்துக்கோங்க; ஸ்டாலின் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

இதை ஏற்கவே முடியாது, மீண்டும் சேர்த்துக்கோங்க; ஸ்டாலின் அதிரடி!

இதை ஏற்கவே முடியாது, மீண்டும் சேர்த்துக்கோங்க; ஸ்டாலின் அதிரடி!

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் தமிழகத்தை சேர்ந்த தலித் பெண் எழுத்தாளர்களின் பல்வேறு படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் எழுத்தாளர் மாகாஸ்வேதாதேவியின் ‘திரௌபதை’, எழுத்தாளர் பாமாவின் ‘சங்கதி’, கவிஞர் சுகிர்தராணியின் ’கைம்மாறு’ மற்றும் ‘என்னுடல்’ ஆகிய படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் நடவடிக்கை மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் குழுவில் ஆங்கிலத்துறையை சேர்ந்த யாரும் உறுப்பினர்களாக இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கடும் கண்டனம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரல் காணாமல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள இயலாது. நீக்கப்பட்ட பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பதிலாக உயர் சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

பின்னணி என்ன?

இதன் பின்னணியில் சாதிய பின்புலம், இந்துத்துவ பின்புலம் இருப்பதாக எழுத்தாளர் சுகிர்தராணி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு,

தமிழக முதல்வர் வலியுறுத்தல்

என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும். பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து

பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad