ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டையே காணல - அன்பில் மகேஷ்
தமிழக பள்ளிக்கல்வித்துறை மானிய விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ' ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாடு காணாமல் போய்விட்டது.
அதை மீட்கும் பணியில்தான் புதிய அரசு ஈடுபட்டுள்ளது' என கூறினார்.
தமிழகத்தில் அதிமுகவின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த வரை மாநில உரிமையும், நிதி நிலைமையும் சரியாக இருந்ததாக திமுக அமைச்சர்களே பலமுறை கூறியுள்ளனர். இந்த நிலையில் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறியது கவனம் பெற்றுள்ளது.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக 28 அறிவிப்புகளை வெளியிட்டார். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தலைசிறந்த புத்தகங்கள் வாங்கப்படும். நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரிய கலைகள்
பயிற்சியளிக்கப்டும்.
சிறந்த ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்து பாடநூல் கழகத்தால் வெளியிட ஏற்பாடு செய்யப்படும். குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்க ரூ. 25 ஆயிரம் ரொக்கத்துடன் கவிமணி விருது வழங்கப்படும். பள்ளி உள்கட்டமைப்பு, கல்வி தரத்தை மேம்படுத்தும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு விருது வழங்கப்படும்.
No comments:
Post a Comment